கும்மிடிப்பூண்டி,ஏப்14-
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி பேரூராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் இதர பிரிவுகளில் பணியாற்றும் 58 பணியாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஆரணி சரவணா கட்பீஸ் சென்டர் உரிமையாளர் பெருமாள் சார்பில் வழங்கப்பட்ட இந்த அரிசியை ஆரணி நகர அதிமுக செயலாளர் தயாளன்,பேரூராட்சி செயல் அலுவலர் கி.ரவி ஆகியோர் பணியாளர்களுக்கு வழங்கினர். நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆரணி அம்மா பேரவை செயலாளர் சீனிவாசன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் மோகனகிருஷ்ணன், ஊழியர்கள் ஹரிபாபு, கிருஷ்ணன்,பாரதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.