திருவாலங்காடு ஒன்றிய குழு தலைவர் ஜீவா விஜயராகவன் தலைமையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் கபசுர நீர்

" alt="" aria-hidden="true" />


திருத்தணி 


திருவாலங்காடு ஒன்றியத்தில் அடங்கிய 42 ஊராட்சிகளிலும் தூய்மை பணிகள்ää சுகாதாரம் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒன்றிய குழு தலைவர் ஜீவா விஜயராகவன் இரவுää பகலாக அதிகாரிகள்ää உள்ளாட்சி பிரதிநிதிகள்ää தூய்மை பணியாளர்களை தொடர்பு கொண்டு அனைத்து பகுதிகளிலும் நோய் தடுப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஒன்றிய குழு தலைவர் ஜீவாவிசயராகவன் தனது சொந்த ஊரான குப்பம் கண்டிகை கிராமத்தில் சுபகர குடிநீர் சுகாதார முறையில் காய்ச்சி அனைத்து ஊர்களுக்கும் வழங்கி வருகிறார். 12வது வார்டு அடங்கிய நார்த்தவாடாää பழையனூர்ää ஜாகீர் மங்களம்ää ராஜ பத்மாபுரம்ää ராஜ ரத்தினபுரம்ää குப்பம் கண்டிகைää முல்லை நகர்ää இருளர் காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 4ää000 பேருக்கு வீடு தேடி நேரில் சென்று இதை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் குப்பம் கண்டிகை ஊராட்சி கழக செயலாளர் வி.சக்தி சேதுபதிää மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கோதண்டராமன்ää முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலைää கவிஞர். பழனி விசயன்ää ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். மேலும்ää திருவாலங்காடு ஒன்றியம் முழுவது உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வாகனங்களில் சென்று வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர நீர் வழங்க அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.